Tamilnadu
“வேலியே பயிரை மேய்ந்த கதையாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட காவலர்கள்”: கையும் களவுமாக சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11 ம் தேதி மகேந்திர் மகன் ஆசிஸ், கடையில் வேலை செய்யும் ஊழியர் ராஜ்குமாருடன் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து சுங்குவார்சத்திரம் பகுதிக்கு சென்று நகைகளை விற்பனை செய்தார். திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சேகர் ஆட்டோவை ஓட்டி சென்றார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடைகளுக்கு நகைகளை வினியோகம் செய்ய சென்றனர்.
அப்போது, ஆட்டோ ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த பையை பறித்தனர்.
இதையடுத்து இது குறித்து மகேந்திர் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறி கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த நகைகளை உள்ளூரில் விற்றால் போலிஸ் விசாரணையில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் தஞ்சாவூர் சென்று அங்குள்ள ஒரு கடையில் விற்க நகைகளை கொடுத்துள்ளார். ஏற்கனவே கொள்ளை போன நகை குறித்தான போட்டோக்களை நகைக்கடை உரிமையாளர்கள் குரூப்பில் மகேந்தர் ஷேர் செய்துள்ளார்.
எனவே இந்த நகைகளை வாங்கி பார்த்த கடை உரிமையாளருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் இதற்கேற்ற பணம் இப்பொழுது என்னிடத்தில் இல்லை நாளை வாருங்கள் உங்களுக்கு பணம் தருகிறேன் என்று சொல்லி நகைகளை வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டு மகேந்திருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
“மஹிந்தர் இது முழுவதும் என்னுடைய நகை தான்” என்று கூறியதால், நகைக்கடை உரிமையாளர் அங்கு உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து ரஞ்சித் காவல்துறையிடம் பிடிபட்டார். இவரை சுங்குவார் சத்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருடியது ரெட்டில்ஸ் ரஞ்சித் ராஜ் (24), வண்டலூர் ராகுல்(20) என தெரியவந்தது. இவர்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்பலால் சவுகார் நகைக்கடையில், ஒரு வருடத்திற்கு முன்பு பிள்ளை சத்திரத்தை சேர்ந்த சந்தோஷ்(23) வேலை செய்து வந்துள்ளார்.
இவர் 15 நாட்களுக்கு ஒருமுறை மகேந்தர் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் நகைகள் எடுத்து வருவதை அவருடைய நண்பரான சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜர் நகரை சேர்ந்த தமிழரசன் வயது 24 இவரிடம் கூறிஉள்ளார்.
இவர் திருக்கழுக்குன்றத்தில் காவல் நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் . இவர் தன்னுடைய நண்பரான மானாமதி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கதிரவன் இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நகை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த நகைகளை கொள்ளை அடித்தால் நன்றாக செட்டில் ஆகிவிடலாம் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட கதிரவன் (23) ராபெரி கொள்ளையர் ஆன ராகுலிடம் இதுபோன்று 400, 500 சவரன் நகை பாதுகாப்பில்லாமல் வருகிறது. இதை கொள்ளை அடித்து விடலாம் என்று கூறியுள்ளார். உடனே சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த எஸ்.ஐ எழுத்துத்தேர்வில் தேர்வாகியுள்ள மாரி வயது 25 மற்றும் ரஞ்சித் ராஜ் ஆகியோர் சேர்ந்து இந்த வழிப்பறி கொள்ளைக்கு திட்டம் தீட்டி உள்ளனர் .
மேலும் இந்த சம்பவத்தின்போது, இந்த வழிப்பறிக் கொள்ளைக்கு மூலகாரணமான காவலர் தமிழரசன், காவலர் கதிரவன், எஸ்.ஐ பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாரி ஆகியோர் தனியே நின்று கொண்டு ராபரி கொள்ளையர்கள் ரஞ்சித் ராஜ், ராகுல் ஆகியோர் மட்டும் சென்று கத்தியை காட்டி நகைகளை பிடுங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து இவர்களிடமிருந்து 388 கிராம் (48 சவரன்) நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேலும் இன்னும் யாரெல்லாம் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சந்தோஷ் கொள்ளையடித்த நகைகளில் தனது பங்கு நகையை அண்ணன் சுமிர் ராஜ் அவருடைய கணக்கில் வைத்துள்ளார் . மேலும் இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக சரவணன் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கொள்ளை வழக்கில் இன்னும் 5 பேரை கைது செய்ய வேண்டியதாக காவல்துறை வட்டாரம் கூறுகிறது. இந்நிலையில் இன்று கதிரவன், தமிழரசன், சந்தோஷ், சரவணன், ராகுல், சுமிர் ராஜ் ஆகியோரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!