Tamilnadu

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்!

இன்று (22-12-2020) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியைப் பார்வையிட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, நல உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

வார்டு 67 - ரங்கசாயி தெருவிலுள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி மூலதன நிதி ரூ.15.31 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டி, 8 ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தார்.

வார்டு 66 - சட்டமன்ற அலுவலகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ - ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவச் சேவையைத் துவக்கி வைத்தார்.

வார்டு 67 - ஜெகநாதன் தெருவில் மாநகராட்சி மூலதன நிதி ரூ.41.34 லட்சம் மதிப்பீட்டில் உதவிப் பொறியாளர் (மின்சாரம்) புதிய அலுவலக அறை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

வார்டு 67 - ஜெகநாதன் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.12.96 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

வார்டு 67 - பார்த்தசாரதி தெருவிலுள்ள விளையாட்டு திடலை, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.26.18 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

வார்டு 67- அமிர்தம்மாள் காலனி பகுதி பிரதிநிதி துக்காராம் அவர்களின் சகோதரர் வரபிரசாத் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வார்டு 68 - மதுரைசாமி மடத்தில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.30.58 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட புதிய கட்டடத்தைத் திறந்துவைத்து, 7 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்து, மழலையர்க்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

பின்னர், வார்டு 69 - பல்லவன் சாலை டான்போஸ்கோ பள்ளியில், 10 பேராயர்களுக்கு சிறப்பு செய்தததோடு, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள போதகர்கள் 60 பேருக்கு புத்தாடை மற்றும் உதவிகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்தார். அதோடு, 1000 கிறிஸ்துவப் பெருமக்களுக்கு, பேண்ட் – 1, சட்டை – 1, புடவை -1, அரிசி 5 கிலோ, போர்வை – 1 மற்றும் கேக் – 1 அடங்கிய பரிசுகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

Also Read: “மக்கள் நம் பக்கம்; 200 தொகுதிகளை வென்றெடுப்போம்; தமிழகத்தை மீட்டெடுப்போம்!” - மு.க.ஸ்டாலின் மடல்!