Tamilnadu

ரூ.312 கோடி உணவு எங்கே எப்போது வழங்கப்பட்டது? டெண்டர் விதி பின்பற்றப்பட்டதா? - திமுக MLA எழுப்பும் கேள்வி

சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர். மா. சுப்ரமணியன், எம்.எல்.ஏ, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்.மயிலை வேலு ஆகியோருடன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை சந்தித்து, தொகுதி ஆய்வின் போது, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அளித்து தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் அளித்தபின் சட்டமன்ற உறுப்பினர் மா சுப்பிரமணியன் பேட்டியளித்ததன் விவரம்:-

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைவரின் வழிகாட்டுதலுடன் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல், மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய 5 பகுதிகளில் முதல் கட்டமாக மாணவர்கள், இளைஞர்கள், போதகர்கள், உலமாக்கள், ஆலய அர்ச்சகர்கள், தூய்மைப் பணியாளர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோரை 14 மணி நேரம் இடைவிடாமல் 5 நாட்கள் சந்தித்து அவர்களிடத்தில் பெறப்பட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களை ஆணையரிடம் தந்து தீர்வு தருமாறு வலியுறுத்தி கேட்டுள்ளோம்.

பொதுப் பிரச்னையாக இருப்பது சென்னையில் உள்ள 26 லட்சம் மக்களுக்கு மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் உணவு வழங்குகிறோம் என்று கூறி 26 லட்சம் பேருக்கு எட்டு நாட்களுக்கு உணவு வழங்குவதற்கு திட்டம் தொடங்கினார்கள். 312 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். எத்தனை பேருக்கு வழங்கினார்கள், எங்கே வழங்கினார்கள், வழங்கப்பட்ட உணவு டெண்டர் விதிமுறை பின்பற்றி வழங்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மக்களை நேரடியாக சந்தித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதிக்கு சென்று வழங்கினால் நாங்கள் கேள்வி கேட்கப்போவதில்லை. பொது மக்கள் வரிப்பணத்தை கொண்டு நிதியை பெற்று வழங்கும் போது சரியான மக்களுக்கு சென்றடைய வில்லை. அதிமுக நிர்வாகிக் பரிமாறிய நிலையை பார்த்தோம். கொரோனா பேரிடர் காலத்தில் ஜவஹர்லால் நேரு திட்டத்தின் கீழ் பொருட்களை அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் விநியோகம் செய்தார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆணையர் இடத்தில் பதிவு செய்தோம்.

சென்னையில் அண்மையில் பெய்த மழைநீர் தேங்கியது செம்மஞ்சேரி, சுனாமி நகர், ராம் நகர், மடிப்பாக்கம் , தாம்பரம் பகுதிகளில் நிரம்பிய ஏரிகளில் உபரி நீர், மழை நீர் கலந்து பகுதிகளிலிருந்து வாரக்கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசி கடுமையான அவதிக்குள்ளாகிறார்கள் மக்கள். மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

சைதாப்பேட்டையில் குப்பை கொட்டும் வளாகம் இருக்கிறது. பயன்படுத்தாத அந்த இடத்தை பூங்காவாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை திருமண மண்டபத்தை குறைபாடு உள்ள கட்டிடத்தை சீர் செய்து தர வேண்டும் என்பதை சுட்டி காட்டியுள்ளோம். வடகிழக்கு பருவமழைக்கு பின்னால் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. அதை உடனடியாக சீர் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: “ரூ.312 கோடி மாநகராட்சி பணத்தை அபகரித்த அ.தி.மு.க” - ஆதாரங்களுடன் மா.சுப்பிரமணியன் MLA குற்றச்சாட்டு!