Tamilnadu
“NEET..CAA..வேளாண் சட்டங்களை ஆதரித்து தமிழக மக்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்திருகிறது”: திருச்சி சிவா
நீட் தேர்வு, குடிரிமை சட்டம், வேளாண் சட்டம் உள்ளிட்ட 3 மசோதாகளும் நிறைவேற்ற காரணமான அ.தி.மு.க அரசு, இரட்டை வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றுகிறது என ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பரப்புரையில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் தெற்கு மாவட்டம் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட அனுமந்தன்பட்டி, கே.கே. பட்டி, கம்பம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” பிரச்சாரப் பயணத்தை தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா மேற்கொண்டு வருகின்றார்.
அந்த பரப்புரை பயணத்தின் போது, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நெல் விவசாயிகள், திராட்சை விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்கள் குறைகளை மனுவாக வழங்கினார். பின்னர் அவர்களது குறைகளை திருச்சி சிவா கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, “மத்தியில் தமிழக மக்களுக்காக, தி.மு.க போராடி வருகின்றது. ஆனால், அ.தி.மு.க அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.
குறிப்பாக, நீட் தேர்வு, குடிரிமை சட்டம், வேளாண் சட்ட மசோதா உள்ளிட்ட மசோதக்களை ஆதரித்து, இரட்டை வேடம் செய்து வருகிறது. மேலும் தி.மு.க ஆட்சி வந்த உடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கம்பம் ஒன்றிய செயலாளர் சூர்யா தங்கராஜ், மாநில தீர்மானிக்க குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், நகரச் செயலாளர் லோகன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !