Tamilnadu
மெரினாவில் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடும் - ஐகோர்ட் எச்சரிக்கை!
சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மீன் மார்க்கெட் அமைப்பது, கடற்கரையோரம் லூப் சாலையை ஒட்டி நடைபாதை அமைப்பது, மீனவர்களுக்கு நடை மேம்பாலம் அமைப்பது, புதிய கடைகள் அமைப்பது தொடர்பாக அடுத்த கட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர்.
வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, புதிய கடைகளுக்கான டெண்டர் முடிவு செய்வது தொடர்பாக நாளை பதில் அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகளை மாநகராட்சி தான் பின்பற்றும் என்றும் அதை நீதிமன்றம் கண்காணிக்கும் விதிமுறைகள் மீறப்பட்டால் உயர்நீதிமன்றம் தலையிடும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!