Tamilnadu
“மகாகவி பாரதிக்கு சென்னையில் சிலை வைத்து பெருமைப்படுத்தியது தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சியினர், தேசிய தலைவர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - என்று தமிழ்நாட்டு உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய எழுச்சிக் கவிஞர் பாரதியார் பிறந்த தினம் இன்று!
அவர் பிறந்த எட்டயபுரம் இல்லத்தை அரசு இல்லமாக்கி, தலைநகர் சென்னையில் அவருக்குச் சிலை வைத்து பெருமைப்படுத்தியது தி.மு.கழக அரசு!
இன்றைய நாட்டு நிலைமையை நினைக்கும் போது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன! வாழ்க பாரதி புகழ்! பெறுக அவர் சொன்ன உயர்வு!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!