Tamilnadu

“கடும் குளிரிலும் 15வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்” : இதுவரை 7 விவசாயிகள் உயிரிழப்பு!

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 15 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இதனால், பிரதமர் மோடி விவசாயிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில், “விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மௌனமாக இருந்ததன் காரணமாகவே விவசாயிகள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். மூன்று சட்டங்களையும் கொண்டு வருவதற்கு முன்பாக விவசாயிகளிடம் முறையாக ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.

அதனை மேற்கொள்ள மத்திய அரசு செய்யத் தவறிவிட்டது. இப்போது போராட்டம் தீவிரமடைந்த பிறகு விளக்குகிறோம் என்று சொல்கிறார்கள். நாடு பொருளாதார சரிவில் இருக்கிறது, வேலைவாய்ப்பு சரிந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்கள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க மோடி முற்றிலும் தவறிவிட்டார். இனிமேலாவது விவசாயிகளை உடனடியாக அவர் அழைத்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருபக்கம் பேச்சுவார்த்தைக் தோல்வியில் முடிந்தாளும் போராட்டத்தை விடபிடியாக விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். கடும் குளிரிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

டெல்லியில், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பாதிக்கும் மேலானோர் முதியவர்கள். தாங்கள் வந்த டிராக்டர்களில்தான் இவர்கள் இரவு தூங்குகிறார்கள். திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 விவசாயிகளும், சிங்கு எல்லையில் 2 விவசாயிகளும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதில் ஒருவர் தவிற அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். போலிஸார் தண்னீரைப் பீச்சி அடித்து கலைக்க முற்பட்ட போது, ஒருவர் சாலையில் விழுந்து அடிபட்டதில் உயிரிழந்ததாக வுவசாயிகள் கூறுகிறார்கள். மற்றவர்கள் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகள் 5 பேர் குடும்பத்திற்கு, பஞ்சாப் அரசு தலா 5 லட்ச ரூ இழப்பீடு அறிவித்துள்ளது. இது தவிற டிராக்டர் திடீரென தீபிடித்தது எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போராட்டக்களத்தியில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பா.ஜ.க அலுவலகங்கள் முற்றுகை, அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு”- போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்!