Tamilnadu

தொடர் மழையால் சேதமடைந்த வெங்காய பயிர்கள் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பார்வையிட்டு அரசுக்கு கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த சின்ன வெங்காய பயிர்களை நேரில் பார்வையிட்டார் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 25,000 ஏக்கருக்கும் மேற்பட்ட சின்ன வெங்காய பயிர்கள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வெங்காய பயிர்களை தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகளிடம் வெங்காய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் பயிர் காப்பீட்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தினார்.

உடன் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பேரூர் செயலாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் நவநீதன், வர்த்தகர் அணி செயலாளர் போஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், கிளைசெயலாளர்கள் மணிகண்டன், முருகன், மாவட்ட பிரதிநிதி சேது, ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Also Read: “இன்னும் 5 மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வரும்; விவசாயிகளின் இன்னல்கள் தீரும்” - கனிமொழி எம்.பி உறுதி!