Tamilnadu

“தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு துணை நின்ற தி.மு.க”: மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த மாணவர்கள்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் 20% இடஒதுக்கீட்டு சட்டத்தின் சட்டத்திருத்தம் நிறைவேறிட குரல் கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமி பயிற்சியாளர் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

“பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்” என்று கடந்த மார்ச் மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

துவக்கத்திலிருந்து தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க - மார்ச் 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 6-12-2020 அன்று அறிக்கை வெளியிட்டார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக, தமிழக ஆளுநர் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20% முன்னுரிமை ஒதுக்கீடு சட்டத்திருத்தத்திற்கு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியதால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (9.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்த சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடமி பயிற்சியாளர் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்விற்கு தமிழ்வழியில் பயிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20% முன்னுரிமை ஒதுக்கீடு சட்டத் திருத்தம் நிறைவேறிட குரல் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

Also Read: "ஆளுங்கட்சியை மட்டுமல்ல, ஆளுநரையும் செயல்பட வைக்கும் தி.மு.க தலைவர்” - மற்றுமொருமுறை நிரூபணம்!