Tamilnadu
“அருவருப்பையும், வக்கிரத்தையும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது பா.ஜ.க” - ஜோதிமணி எம்.பி. கடும் தாக்கு!
உலகத்திலேயே அரசியல் ஆயுதமாக ஆபாசத்தையும் வக்கிரத்தையும் பயன்படுத்துவது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தான், மக்கள் விரோத பா.ஜ.க அரசுக்கு இங்குள்ள அ.தி.மு.க அரசு கூசாமல் துணை நிற்கிறது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெற்றார்.
அப்போது மதியநல்லூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 100 நாள் வேலை செய்யும் பெண்களை சந்திக்கச் செல்லும்போது பள்ளியின் கதவு திறக்கப்படாமல் மூடி இருந்ததால் ஆத்திரமடைந்த எம்.பி ஜோதிமணி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் சென்று எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நாங்கள் வருவதாக தெரிவித்தும் கதவை பூட்டி வைத்ததற்கான காரணம் என்ன? இதே இத்தொகுதியின் எம்.எல்.ஏவும் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் வந்தால் இவ்வாறுதான் செய்வீர்களா? யார் சொல்லி கதவை பூட்டி வைத்தீர்கள்? ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா என்று கேள்விகளை எழுப்பி எம்.பியும் எம்.பியுடன் வந்திருந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: “8 வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை ஒப்படைக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அதன் பின்னர் எம்.பி ஜோதிமணி செய்தியாளரிடம் பேசுகையில் தெரிவித்ததாவது :
யாராக இருந்தாலும் அரசியலில் தரம்தாழ்ந்த விமர்சனங்களை வைக்கக்கூடாது. 2014க்கு பிறகுதான் தரம் தாழ்ந்து ஆபாசமான விமர்சனங்களை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செய்து வருகிறது. உலகத்திலேயே அரசியலில் ஆயுதமாக ஆபாசத்தையும் அருவருப்பையும் வக்கிரத்தையும் செய்வது பா.ஜ.க அரசுதான். எட்டு வழிச் சாலைத் திட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தி.மு.க தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தவுடன் விவசாயிகளுக்கு விரோதமான எட்டு வழிச் சாலை திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். மக்கள் விரோத பா.ஜ.க அரசுக்கு இங்கு உள்ள எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு கூசாமல் துணை நிற்பது வேதனைக்குரியது.
வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். தற்போதைய அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு விபத்துகளில் உயிரிழப்பதற்கு பத்தாண்டு கால அ.தி.மு.கவின் ஊழல் ஆட்சியே காரணம். சாலை குடிமராமத்து பணி உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை அ.தி.மு.க அரசு சுரண்டுகிறது.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. ‘அண்ணாத்த’ படத்திற்கு 40 நாள் ஷூட்டிங் செல்லவேண்டும் என்பவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் என்பது பொதுமக்களுக்காக முழு ஈடுபாட்டோடு செயல்படுவது என்று தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?