Tamilnadu
குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகளை மட்டுமே பொருத்தவேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை!
தமிழகத்தில் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களில், குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளின் ஜி.பி.எஸ் கருவிகளை மட்டுமே பொருத்தவேண்டும் என்ற போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு வாகனங்கள் செல்லக்கூடிய இடங்களின் புவியிடத்தை கண்டறிய ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும் என்று கடந்த 2018ல் உத்தரவிடப்பட்டது. அரசுத்துறை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள்,ரிக்ஷாக்கள் தவிர அனைத்து பொது போக்குவரத்தில் உள்ள வாகனங்களுக்கும் பொருத்தவேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்ட நிலையில், இந்தக் கருவிகளை குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
140 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ள நிலையில் தன்னிச்சையாக, வெளிப்படைத்தன்மை இல்லாமல் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும் வாங்கவேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்ட விரோதமானது என்றும் எனவே இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஷேக் இஸ்மாயில் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்கு குறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர் பதவிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?