Tamilnadu

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.77 லட்சமாக உயர்வு - பலி எண்ணிக்கை 1.40 லட்சத்தை கடந்தது! #COVID19

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 32,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,77,203 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 391 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,40,573 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 39,109 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 91,38,901 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 3,96,729 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 94.45% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.10% ஆக குறைந்துள்ளது.

Also Read: “தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பதிவாகும் பலி எண்ணிக்கை” : மொத்த பாதிப்பு 7,90,240 ஆக உயர்வு! #COVID19