Tamilnadu
“சவால் விடுத்து 3 நாட்கள் ஆகியும் எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்?” : ஆ.ராசா கேள்வி!
மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 10வது நாளாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் துணைபோகும் அதிமுக அரசை கண்டித்து கொட்டும் மழையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா தலைமையில் கருப்புச்சட்டை அணிந்து உதகை ஏ.டி.சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, “விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை அரசு மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு அது நியாயமான விலையில் சந்தைபடுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதுபிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசிடம் கேட்கக்கூடாது என இந்த திருத்தச் சட்டத்தில் இருப்பதால் விவசாயிகளின் நிலை எதிர்காலத்தில் அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் அடகு வைக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எப்படி மோடியை தமிழகத்தில் நுழையவிடாமல் தமிழக மக்கள் தடுத்தார்களோ, அதேபோல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் எதிராக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்.” எனத் தெரிவித்தார்.
இதன்பின்னர் ஆ.ராசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் மூன்று நாட்களில் தன்னை அழைத்து விவாதிக்க வேண்டும் என சவால் விடுத்திருந்த நிலையில், இதுவரை எடப்பாடி பழனிசாமி மௌனம் கொண்டிருப்பது அவர்கள் ஊழல்வாதிகள் என்பதற்கு அடையாளமாக இருப்பதாக தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!