Tamilnadu
திருட்டு பைக்குகளை வைத்து பொறியியல் ப்ராஜெக்ட் செய்து கொடுத்த பட்டதாரி.. சென்னையில் வசமாக சிக்கிய கும்பல்
சென்னையில் வாட்சப் குழு மூலமாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புல்லட் இருசக்கர வாகனத்தை குறிவைத்து ஒரு கும்பல் திருடுவதாக வந்த தகவலை அடுத்து கிழக்கு மண்டல இணை ஆணையரின் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். ஏற்கனவே மூன்று கட்டமாக 29 புல்லட் வாகனங்களை பறிமுதல் செய்து 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் புல்லட் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 10 புல்லட்டுகள், 6 உயர் ரக இருசக்கர வாகனங்கள் , 1 காரையும் மீட்டுள்ளனர். இது தொடர்பாக தூத்துகுடியை சேர்ந்த சுல்தான் லியாகத் அலி, மணலியை சேர்ந்த பாஸ்கர், புதுப்பேட்டையை சேர்ந்த இஸ்மாயில் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தின் எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்களை கோட்டூர்புரத்தை சேர்ந்த சோகன்குமார் என்பவரிடம் விற்றுள்ளனர்.
சோகன் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் படித்துவிட்டு, கொட்டிவாக்கம் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி கொண்டு, ரேஆன் சிக்னேஷர் என்ற வலைதளத்தில் தான் தயார் செய்த பிரோஜக்டுகளை விளம்பரம் செய்து வந்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் மூலம் பொறியியல் பட்டாதாரி மாணவர்களுக்கு பல்வேறு ப்ராஜெக்ட் செய்து கொடுக்கிறார். குறிப்பாக சென்னை ஹிஸ்துஸ்தான் கல்லூரி, டெல்லி ஐஐடி, கான்பூர் ஐஐடி உட்பட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு திருட்டு இருசக்கர வாகனங்களிலிருந்து எஞ்சின்களை பயன்படுத்தி சிறிய ரக கார், ஹெலிகாப்டர், உள்ளிட்டவை செய்து கொடுத்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், திருடிய எஞ்சின்களை வைத்து இரும்பு திரை முதல் மற்றும் இரண்டாம் பாகம் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக பைக் ஒன்றை ஷோகன் தயார் செய்து கொடுத்து வந்துள்ளார். மேலும் விசாகபட்டினம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களுக்கு புதுவிதமாக பைக்கை வடிவமைத்து கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
Also Read: இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதுபோல் புல்லட் பைக்குகளை திருடும் கும்பல்... வாட்ஸ்அப்பில் ஆர்டர்!
அதேபோல், திருடிய இருசக்கர வாகனத்தில் எஞ்சின்களை எடுத்துவிட்டு வேறொரு எஞ்சினை பொருத்தி ஹைதராபாத், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுல்தான் லியாகத் அலி, பாஸ்கர் ஆகியோரிடம் 10ஆயிரம் ரூபாய் கொடுத்து எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்களை வாங்கி ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பிராஜெக்ட் செய்து கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு வந்து புதுப்பேட்டை பகுதியில் மெக்கானிக்காக உள்ள இஸ்மாயில் என்பவரிடம் கொடுத்தால் உதிரி பாகங்களாக பிரித்து கொடுத்து வந்துள்ளார். இது வரை தனிப்படை போலீசாரால் 4 கட்டமாக 40 புல்லட் வாகனங்களும், 6 உயர் ரக இருசக்கர வாகனங்கள் , 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திருடிய இருசக்கர வாகனத்தை உடனடியாக உதிரி பாகங்களாக பிரித்தெடுக்கும் கும்பல் புதுப்பேட்டையில் செயல்பட்டு வருவதாகவும் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் இறங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!