Tamilnadu
“அ.தி.மு.க அரசால் முடக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படும்”: ஐ.லியோனி உறுதி!
நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அம்பாசமுத்திரம் நாங்குநேரி சட்டமன்ற வாரியாக கடந்த 3 நாட்களாக தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தேர்தல் பரப்புரையின் போது பொது மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று மூன்றாவது நாளாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணநல்லூரில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முதலாவதாக கழகக் கொடியை ஏற்றி வைத்து அந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் கலந்து கொண்ட மக்கள், பேருந்து வசதி, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனை, என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து குறைகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்க நிதி உதவி அளிக்கப்பட்டது.
பின்னர் திண்டுக்கல் ஐ.லியோனி கூட்டத்தில் உரையாற்றிய பேசுகையில், “எழுத்தறிவும் படிப்பறிவும் முக்கியம் என நினைத்து பெருந்தலைவர் காமராஜர் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்தார். காமராஜர் 100 பள்ளிகளை திறந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் ஆயிரம் பள்ளிகளை திறந்து காமராஜருக்கு பெருமை சேர்த்தார்.
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வராக வந்த கலைஞர் அந்த திட்டத்தை முடக்காமல் அதை மேலும் மெருகேற்றி பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார். பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும். சொந்த காலில் நிற்க வேண்டும் என நினைத்து பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி இயக்கம் தி.மு.க.
திருமண உதவித்திட்டம், பெண்கள் உயர்கல்வி படிப்புத் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்கள் என பல்வேறு திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவந்துள்ளது.இங்கு பேசிய மக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனர்.
முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை, வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால், விரைவில் தி.மு.க ஆட்சி உதயமாக போகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ஒரே கையெழுத்தில் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், அவைத்தலைவர் அப்பாவு, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆறுமுகம், மற்றும் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்ட தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!