Tamilnadu
‘நிவர்’ கடந்த சுவடு மறைவதற்குள் தமிழகம், புதுவையை நெருங்கும் ‘புரெவி’ புயல்.. வானிலை மையம் எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று டிசம்பர் இரண்டாம் தேதி தமிழகம், புதுவை கடற்பகுதிகளை நெருங்கும். இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு புரெவி என பெயர் வைக்கப்படும்.
இதன் காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு. டிசம்பர் 2,3ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக முதல் அதீத கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!