Tamilnadu
11 கிமீ வேகத்தில் நகர்கிறது ‘நிவர்’ - இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் கனமழை நீடிக்கும்!
நிவர் புயலின் நவ.,2ம் தேதி பிற்பகல் 12 மணி நிலவரம் குறித்து சென்னை வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது, “நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவைக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலூருக்கு தென் கிழக்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .
இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதில் தற்போது காற்றின் வேகம் 115 முதல் 110 கிலோ மீட்டரில் இருக்கிறது. இதை தொடர்ந்து இன்று மதியம் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை அருகே இன்று இரவு கடையை கடைக்கும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் தேதி மழை வரை தொடரும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
கனமழை பொறுத்தவரையில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை அரியலூர், பெரம்பலூர் , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் காற்று வீசக்கூடும். சமயங்களில் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடல் பகுதியில் இன்று இரவு வரை தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும்.
வடகிழக்கு பருவமழை தற்போது வரை தமிழகத்தில் 26 சதவீதம் குறைவாகி பதிவாகி உள்ளது: இயல்பு அளவு - 338 மிமீ. ஆனால் பதிவான அளவு 249 மி.மீ. சென்னையில் மட்டும் 14% அதிகமாகியுள்ளது. இயல்பு அளவு 58மி.மீ. பதிவான அளவு 66 மி.மீ
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!