Tamilnadu

நிவர் புயல் - மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேடி போய் கைகொடுக்கும் தி.மு.க : காணாமல் போன அ.தி.மு.க!

நிவர் புயலின் காரணமாக கடந்த 2 தினங்களாக கடலோர மாவட்டம் மற்றும் சென்னை நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழலில், அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, பாதுகாப்பான இடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி கொடுக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திக்கா குளம் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு காலை சிற்றுண்டியை பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கொளத்தூர் பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளிதரன், தலைமை கழக வழக்கறிஞர் சந்துரு, உள்ளிட்ட ஏராளமான தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்யா நகர் B மற்றும் C பகுதியில் உள்ள 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. துறைமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உணவு வழங்கப்பட்டது.

ஆனால், சென்னையில் இவ்வளவு புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது போது அ.தி.மு.க-வை சார்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் யாரும் தங்களை சந்திக்க வரவில்லை என்றும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளையோ செய்ய முன்வரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாடியுள்ளனர்.

Also Read: #LIVE UPDATES | ‘நிவர் புயல்’ மிக கடுமையான ‘சூறாவளி புயலாக’ மேலும் தீவிரமடைய வாய்ப்பு! #CycloneNivar