Tamilnadu
MBBS படித்துவிட்டு யாசகம் கேட்ட திருநங்கையின் டாக்டர் கனவை நிறைவேற்றி காவல் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டத்தில் திலகர் திடல் கனவை காவல் ஆய்வாளர் கவிதா வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த திருநங்கைகள் அங்குள்ள கடைகளில் யாசகம் கேட்டுச் சென்றுள்ளனர்.
இதனைப் பார்த்த ஆய்வாளர் கவிதா, அவர்களை அழைத்து வந்து, “ எதற்காக யாசகம் செய்கிறீர்கள்? உதங்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருகிறோம். இந்த தொழிலை விட்டுவிடுங்கள்” என்று அறிவுரைக் கூறியுள்ளார்.
அப்போது அதில் இருந்த திருநங்கை ஒருவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் முடித்து இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா, மாவட்ட காவல்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்தை அனுகி, மருத்துவம் படித்த அந்த திருநங்கைக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக காவல்துறையின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாநகர் திலகர் திடல் பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை அழைத்து விசாரித்தபோது, தான் MBBS முடித்து உள்ளதாகவும் தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதுடன் சமுதாயத்தில் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக திலகர் திடல் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களிடம் தனது நிலையை கூறி அழுதார்.
அவரது நிலையை உணர்ந்த காவல் ஆய்வாளர் அவர்கள் மருத்துவ படிப்பதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று சரி பார்த்ததில் அவர் கூறிய தகவல் உண்மை என்பதை அறிந்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர் மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து, மருத்துவமனை அமைப்பதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
தற்போது மருத்துவராக திருநங்கை அவர்கள் தனது பணியை தொடங்க இருக்கிறார். கூடிய விரைவில் திருநங்கை ஒருவர் டாக்டராக மதுரை மாநகரில் வலம் வர தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். காவல் ஆய்வாளரின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!