Tamilnadu
#LIVE UPDATES | ‘நிவர் புயல்’ மிக கடுமையான ‘சூறாவளி புயலாக’ மேலும் தீவிரமடைய வாய்ப்பு! #CycloneNivar
சென்னை மாநகராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை அண்ணா சாலையிலுள்ள தர்கா காற்றில் மேல் கூரை இடிந்து விழுந்தது.
குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்!
நிகர் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாமல் மேடான பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் மிக கனமழையாக இருப்பதால் அயனாவரம், வில்லிவாக்கம், ஐசிஎப், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
அதேப்போல், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. காலை 9 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை!
நிவார் புயலின் எதிரொலியாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
‘நிவர் புயல்’ மேலும் தீவிரமடைய வாய்ப்பு!
இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின் படி 24-ம் 200 ஆம் தேதி 2330 மணிநேர நிலவர படி, சூறாவளி புயல் நிவர் ஒரு கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையமாக உள்ளது. இது கடலூரில் இருந்து சுமார் 310 கி.மீ. அடுத்த 12 மணி நேரத்தில் இது மிகவும் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
பாலச்சந்திரன் பேட்டி:
நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலு பெற்றுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு 320 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து தீவிர புயலாக வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையை கடக்கும் பலத்த காற்று மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்தார்.
விமானங்கள் ரத்து!
நிவா் புயல் காரணமாக சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து இன்று புறப்படும் 6 விமானங்களும், அதைப்போல் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு வரும் 6 விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் 148 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது!
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 148 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 254 ஏரிகள் 75% தனது கொள்ளளவை எட்டியுள்ளது.
274ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளது. 202 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 30 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 1 ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் உள்ளது என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று மதியம் 12 மணியளவில் 1,000 கனஅடி திறக்கப்படவுள்ளது. குன்றத்தூர். நத்தம் திருமுடிவாக்கம். திருநீர்மலை. வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில்வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை விடுமுறை!
நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்!
நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலாக உருவானது ‘நிவர் புயல்’
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர புயலாக உருவானது.
மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு!
நிவர் புயல் எதிரொலியால் இன்று நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு!
“நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்” என மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
மேலும் அத்தியாவசிய அவசிய உதவிகளுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் , புதுவைக்கு மஞ்சள் அலெர்ட்!
புதுச்சேரியிலிருந்து 550 கிமீ சென்னையிலிருந்து 590 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்காலில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
புதுச்சேரிக்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்!
நிவர் புயல் எதிரொலியாக புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.
தலைமைச் செயலாளர் ஆலோசனை!
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
உள்துறை செயலாளர் பிரபாகர், வேளாண்மைத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதி தீவிரமடைந்து வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை எச்சரிக்கும் வகையில், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் இன்று 3,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேப்போல், புதுச்சேரி துறைமுகத்தில் 3 என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நிவர் புயல் தீவிரம்: ரெட் அலர்ட்!
நிவர் புயல் கரையைக் கடக்கும்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம் அதை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு துறை ரீதியான சிவப்பு எச்சரிக்கையும், கரை கடந்து செல்லும் வழியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் துறை ரீதியான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
நிவர் புயல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதனால், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்று சுழற்சி படிப்படியாக வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தமாக மாறியது.
அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறத் தொடங்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறி 25ம் தேதி சென்னைக்கும் காரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 25ம் தேதி வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக உருவாகும்.
தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டுள்ளது. இப்புயல் நாளை மறுநாள் நவம்பர் 25-ம் தேதி புயல் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!