Tamilnadu

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் சென்னைவாசிகள் : பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வசித்து வந்தவர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக தீபாவளிக்கு முன்பிருந்தே சென்னையிலிருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேலானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தீபாவளி பண்டிகை முடிந்து திங்கட்கிழமையான இன்று மீண்டும் அனைவரும் சென்னை திரும்பிக்கொண்டிருக்கின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள் பெரும்பாலானோர் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் இறங்கினர்.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிகாரணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்தவர்கள் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை தாம்பரம், பல்லாவரம், கிண்டி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும் என்பதற்காக மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக அனைத்து பேருந்துகளையும் திருப்பு விட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்துக்கு மாற்றம் செய்ததால் பெருங்களத்தூரில் வாகன போக்குவரத்துக்கு நெரிசல் காணப்படாமல் மக்களின் கூட்டம் மட்டுமே அதிகமாக உள்ளது.

போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாமல் இருக்க பெருங்களத்தூரில் போக்குவரத்துக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலிஸார் நள்ளிரவிலிருந்தே பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: நெருங்கும் தீபாவளி பண்டிகை.. இந்தியாவில் மளமளவென உயரும் கொரோனா தொற்று: ICMR எச்சரிக்கை மீறும் பொதுமக்கள்!