Tamilnadu
சென்னையில் ஒரேநாளில் 58 தீ விபத்து : நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 348 வழக்குகள் பதிவு!
தமிழகத்தில் காற்றுமாசு பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் காலை 6 மணி முதல்7 வரையும் பின்னர், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், நீதிமன்றம் விதித்திருந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வீதி வீதியாய் சென்று சுற்றுசூழல் பாதுகாப்பே முக்கியம் என அறிவுறுத்தினர்.
அதனையும் மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களும் போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் நேற்று காலை முதல் இரவு 8 மணி வரை 33 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதேப்போல், மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே 2 இரண்டு மணி நேரத்தில் 25 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் வந்த தகவலின் படி நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !