Tamilnadu
ரேஷன்கடை திறப்பின்போது கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க நிர்வாகிகள்- மக்கள் சுற்றிவளைத்ததால் தப்பியோட்டம்!
திருவள்ளூர் அருகே தற்காலிக நியாயவிலைக் கடையை திறக்கச் சென்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ரேஷன் கடை ஊழியர் உள்ளிட்டோருடன் வாக்கு வாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்க்குட்பட்ட காவேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருகானபள்ளி கிராமத்தில் தற்காலிக நியாவிலை கடையினை துவங்கி வைப்பதற்காக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வருகை தந்தார்.
அதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ், தி.மு.க ஒன்றிய செயளாலர் மகாலிங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் காத்திருந்த நிலையில் அங்கு வந்த திருவாலங்காடு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சக்திவேல், அ.தி.மு.க நிர்வாகி இந்திரசேனன் ஆகியோர் நியாவிலைக்கடை பணியாளரிடம் யாரை கேட்டு நிகழ்ச்சியை நடத்துகிறாய் என்று கேள்வி எழுப்பி, உன்னை ‘தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன்’ என்று பகிரங்க மிரட்டல் விடுத்ததோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனை தடுக்க முயற்சித்த பொதுமக்களையும் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சக்திவேல் தனது காலில் அணிந்திருந்தசெருப்பைக் கழற்றி தாக்க முயன்றார். இதையடுத்து, கிராம மக்கள் அ.தி.மு.கவினரை சுற்றி வளைக்கவே அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட அ.தி.மு.கவினர் தலை தெறிக்க காரில் ஏறி தப்பித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!