Tamilnadu
வெற்றுத்தாளில் கைரேகை பெற்று சொத்துகளை அபகரித்த பேத்தி - ஆட்சியர் விசாரித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு!
வெற்றுக் காதிதத்தில் கைரேகை பெற்று பேத்தி அபகரித்த சொத்துகளை மீட்டுத்தரக்கோரி பாட்டி தொடர்ந்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த சாலம்மாள் என்ற 95 மூதாட்டியிடம், அவரது மகள் வழி முதல் பேத்தியான லோகநாயகி, வெற்றுக் காகிதத்தில் கைவிரல் ரேகைகளை பெற்று, சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி தெரியவந்தபிறகு அந்த பத்திரப்பதிவை ரத்து செய்த சாலம்மாள், தன் சொத்துகளை மகள் பெயரிலும், இரண்டாவது பேத்தி பெயரிலும் எழுதி வைத்துள்ளார்.
இதன்பின்னர் லோகநாயகி தொடர்ந்த சிவில் வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், சாலம்மாள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடியானது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில், லோகநாயகி அபகரித்த சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் சாலம்மாள் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கடந்த பிப்ரவரியில் விசாரணை நடத்தியஆட்சியர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் சாலம்மாள் மீண்டும் புகார் அளித்துள்ளார்.
அதன்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தன் புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலம்மாள் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, மூதாட்டி சாலம்மாள் புகாரில் இரு தரப்பினரையும் அழைத்து, அவர்களின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளித்து, 4 வாரத்தில் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!