Tamilnadu
“தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டி படுகொலை செய்த ரவுடிகள்” : தந்தை கண்முன்னே நடந்த கொடூரம் !
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு தன் நன்பரிடம் பேசிவிட்டு வீட்டின் அருகே சென்றபோது, புதுநல்லூரைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் மோசஸை சரமாரியாக வெட்டியுள்ளனர். மோசஸின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து மோசஸின் தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்த தன் மகனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
என்ன செய்வது என திகைத்து போன அவர் காவல்நிலையத்திற்கு போன் செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த மோசஸின் தந்தை நீதி கிடைக்காமல் என் மகனின் பிரேதத்தை வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
மேலும், ரவுடிகள் எந்த நிருபர் புதுநல்லூர் வந்தாலும் வெட்டுவேன் என கூறியதாக கூறினார். ரவுடிகளின் அட்டகாசத்தால் பழையநல்லூர் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இந்நிலையில், மோசஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்திட வலியுத்தியும், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு 75 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளார்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையினர் தவறி விட்டதாக கோஷங்களை எழுப்பிய பத்திரிக்கையாளர்கள், மருத்துவர், செவிலியர், அரசு ஊழியர்களை தாக்கினால் தனி சட்டப்பிரில் நடவடிக்கை எடுப்பது போல் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படால் தனி சட்டப்பிரிவு கீழ் கைதுசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், கொலை செய்த மோசஸ் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிடவேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர் மோசஸ் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சமூகவிரோதக் கும்பலால் தனியார் தொலைக்காட்சிச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை.
சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் எடப்பாடி அ.தி.மு.க. அரசும், அதன் காவல்துறையும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடி; பத்திரிகைச் சுதந்திரம் காக்க தி.மு.கழகம் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!