Tamilnadu

வடசென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்தாமல் அரசு அலட்சியம்... மத்திய அரசு ஒதுக்கிய ரூ.80 கோடி நிதி எங்கே?

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் ( சென்னை காலநிலை செயல்பாட்டு குழு), ஆறு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தியதாகவும், இதில் எந்த தொழிற்சாலைகளும் மாசுக் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் காற்றை மாசுப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவினர் குற்றம்சாட்டினர். மேலும் வடசென்னை பகுதிகளில் 32 அபாயகரமான தொழிற்சாலைகள் இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு நுரையீரல், மூச்சுத்திணறல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவித்தனர். இதுபோன்ற மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் இனிமேல் வட சென்னைக்கு வரக்கூடாது என கோரிக்கை வைத்தனர்.

காற்று சுத்தம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.80 கோடி நிதி வழங்குவதாகவும், இந்தப் பணத்தை வடசென்னையில் அதிக அளவில் செலவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். வடசென்னையை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் அதிகம் வாழ்ந்து வருவதாகவும், இதுபோன்ற மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளால் மேலும் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து ஆய்வு செய்து விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல் 80 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் மாசு கட்டுப்படுத்த வழங்கப்படுகிறது இதில் வடசென்னை பகுதிக்கு அதிக அளவு ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டனர்.

Also Read: உயிர்க்கொல்லியாக மாறும் காற்று... சென்னைவாசிகள் தப்பிக்க வழி என்ன? - மருத்துவர்கள் சொல்லும் வழிமுறைகள்!