Tamilnadu
ரூ.500 கோடி மேல் முறைகேடு - S.P.வேலுமணி மீது வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் திமுக முன்னாள் MLA மனு!
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23.72 லட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம்,14வது நிதிக்குழு மற்றும் மாநில நிதிக்குழு நிதியில் இருந்து 969.32 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.
இதில், அதிக விலைக்கு எல்.இ.டி. விளக்குகளை கொள்முதல் செய்ததன் மூலம் 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பியிருந்தார்.
இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை பதிலளித்துள்ளதாக கூறி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், தனது புகாரை ஆளுநருக்கு அனுப்பி, அவரது ஒப்புதலைப் பெற்று, அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?