Tamilnadu
“ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யவேண்டும்” : ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு!
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் செல்போன்கள் மூலம் ஆன்லைனில் சீட்டு விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பொழுது போக்கிற்காக ஆன்லைனில் சீட்டு விளையாடியது போக, தற்போது பணத்திற்காக விளையாடவும் ஆரம்பித்துள்ளனர். இதனால் பலர் தங்கள் பணத்தை இழந்து நிற்கின்றனர்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் மூலம் ஒரே மாதத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏராளமான அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்றும் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்தார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் உள்ளிட்டவற்றால் பல இளைஞர்கள் தற்கொலை மற்றும் பணம் இழப்பது தொடர்ந்து வருகிறது. எனவே முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறுவதையும் தடுக்க வேண்டும் என்றும் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்வதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு தெரிவித்த நிலையில், இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!