Tamilnadu
தென்பெண்ணை ஆற்றில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் : பொன்முடி எம்.எல்.ஏ
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக பழுது ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது.
தற்போது அரசு சுமார் மூன்று கோடி அளவில் இந்த பாலத்தை சீரமைக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது . இந்த பணிகள் தொடங்கி ஆறு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை பணிகள் சரிவர நடைபெறவில்லை.
இதனை அறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி இன்று பணிகள் நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 12 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 நுழைவு வாயில் திறந்து வைத்தார். பின்னர் திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அவர் திறந்து வைத்தார்.
செய்தியாளரிடம் சந்தித்த முன்னாள் அமைச்சரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி, திருக்கோவிலூரில் நடைபெற்று வரும் பாலம் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் இதனால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி இருப்பதால் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி, மத்திய மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், பிரபு, நகர செயலாளர் கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!