Tamilnadu
“பயிரிடப்பட்டுள்ள சோள பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்” : விருதுநகர் விவசாயிகள் வேதனை!
விருதுநகர் அருகே மருளுத்து பகுதியில் சுமார் 9 ஏக்கரில் விவசாய நிலத்தில் வைரமுத்து என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளை மற்றும் சிவப்பு சோள பயிர்களான மாட்டுத்தீவன பயிர்களில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.
பச்சை, மஞ்சள் என வெவ்வேறு வகையான வெட்டுக்கிளிகள் விவசாய நிலத்திலுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிர்கள் பாதி பருவத்திலேயே வெட்டுக்கிளிகள் பாதிப்பால் சேதமடைந்துள்ளது. மேலும் செலவு செய்த பணம் முழுவதும் வீணாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்கிளிகள் குறித்து வேளாண் துறையினர் ஆய்வு செய்து வெட்டுக்கிளிகள் பாதிப்பை தடுக்க வேண்டும் எனவும் அடுத்தடுத்துள்ள சோள பயிர்களுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விருதுநகர் பகுதியில் படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளை என்பதையும் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!