Tamilnadu
கரூரில் பட்டப்பகலில் 16 வயது சிறுவன் கடத்தல் : வட மாநில கும்பல் மீது சந்தேகம் என பெற்றோர் குற்றச்சாட்டு!
கரூர் காந்திகிராமம் நரிக்கட்டியூரைச் சேர்ந்த அருள்சாமி என்பரின் மகன் ஆதிஷ் பிரணவ் (16), 10 ஆம் வகுப்பு முடித்த இவர், நேற்று, காந்தி கிராமம் மேம்பாலம் அருகே சைக்கிளில் சென்ற போது ஆம்னி வேனில் வந்த 5 பேர்கள் சினிமா பாணியில் ஆதிஷ்பிரணவ்க்கு குளோரோபாம் கொடுத்து கடத்தியுள்ளனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் கார் சென்றுள்ளது. மயக்கம் தெளிந்த பிரணவ், கார் கண்ணாடியை எட்டி உதைத்துள்ளார். இதனால், கடந்தல் கும்பல் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சாலை ஓரத்தில் இருந்த விவசாயி செல்போனில் இருந்து அவரது வீட்டிற்கு தகவல் கொடுத்து குடும்பத்தினர் மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட காரில் அறுவை அரங்கில் சிகிச்சைக்காக இருக்கும் கத்தி மற்றும் சிறு ஆயுதங்கள் இருந்ததாகவும், காரில் இருந்தவர்கள் இந்தி மற்றும் பிற மொழிகளில் பேசியுள்ளனர்.
இது தொடர்பாக சிறுவனின் தந்தை அருள்சாமி தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் கடத்தப்பட்டதற்கு எந்த வித முன்விரோதம் இல்லை என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறுவன் அபினவ் தனது சித்தப்பாவின் அரிசி மண்டியில் தான் இருந்து வந்தார் என்றும், அரிசி மண்டி உரிமையாளர் மகன் என தெரியாமல் பணத்திற்காக கடத்தி விட்டார்களா? அல்லது, கிட்னி போன்ற மனித உறுப்புகளை திருடும் கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் கடத்தல் கும்பலா? என பல்வேறு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் போலிஸார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!