Tamilnadu

2ம் நாளிலேயே தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை... சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக டிஜிபி அலுவலகம் மயிலாப்பூரில் 18 சென்டி மீட்டர் மழையும், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.

Also Read: “உங்களால் முடியாவிடில் சென்னையை காக்க பேரிடர் படையை அழையுங்கள்” - அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!