Tamilnadu
தமிழகத்தில் நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சென்னை வானிலை மையம், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!