Tamilnadu
“விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியது தி.மு.க அரசு” - பொன்முடி MLA பேச்சு!
விழுப்புரத்தில் விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில விவசாய அணி செயலாளர்கள் சின்னசாமி, ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ, தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது என்றும், விவசாயிகளின் பெரும் துயரமாக இருந்த மின் கட்டணம் ரத்து செய்தது தி.மு.க ஆட்சி காலத்தில்தான் என்றும், விவசாயக் கடன் 7,000 கோடி கடன் தள்ளுபடி செய்தது தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் என்றும் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் அனைவரும் தி.மு.கவிற்கு வாக்களிக்கும் வகையில் விவசாய அணி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இந்தியாவிலேயே மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கு எதிராக முதன்முதலாக கண்டன குரல் கொடுத்தது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!