Tamilnadu

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவி : விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.

ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில், முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது வெளிச்சத்து வந்துள்ளனர்.

இதனைக் கண்டித்து பலரும் மோடி அரசாங்கத்தை விமர்த்து வரும் வேளையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜேந்திரன் நகரைச் சேர்ந்தவர் ஜவுளிக்கடை வைத்திருக்கும் பாஸ்கர். 19 வயதான இவரது மகள் ரம்யா தேவி   சென்னையில் நீட் நுழைவதற்கான தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நீட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில், குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த ரம்யா தேவி சோகத்துடன் யாரிடமும் பேசமால் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்த கொசு மருந்தை சாப்பிட்டதால் மயக்க நிலையை அடைந்ததுள்ளார். மகள் மயக்கமடைந்ததைப் பார்த்த பெற்றோர்கள், அதிர்ச்சியடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவி செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீட் தேர்வு முடிவுகளில் தொடரும் குளறுபடி - ஆதாரத்துடன் சிக்கியதும் தேர்வு முடிவுகளை நீக்கிய மோடி அரசு!