Tamilnadu

“அடிக்கல்நாட்டியது ஓரிடம்; தடுப்பணை கட்டுவது வேறொரு இடமா?”-முதல்வருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விவசாயிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூரில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 42.26 கோடி மதிப்பில் பாலாற்றில் சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் அடிக்கல் நாட்டிய இடத்தில் தடுப்பணை கட்டாமல் மாற்று இடத்தில் பழையசீவரம் பகுதியில் பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

பல ஆண்டுகள் விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுப்பணை திட்டத்தை கொண்டுவந்தனர். அரசு அதிகாரிகள் குறைந்த மதிப்பில் வேறொரு இடத்தில் பணிகளை துவக்கி தடுப்பனை கட்டி வருகின்றனர்.

இதனால் இந்த தடுப்பணை பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் முதல்வர் அடிக்கல் நாட்டிய உள்ளாவூர் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பயனில்லாததால் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

அந்த சுவரொட்டியில் “உழவர்கள் வாழ தடுப்பணையா?; பொதுப்பணித்துறையின் தன் விருப்பிற்கு தடுப்பணையா?” எனக் கேள்வி எழுப்பி உழவர் பயன்பெறும் வகையில் முதல்வர் அடிக்கல் நாட்டிய உள்ளாவூர் - பினாயூர் இடையே தடுப்பனை அமைத்திடக் கோரி தடுப்பணையின் முழு வரைபடத்துடன் மாவட்டத்தில் பல இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: “பா.ஜ.கவுக்கு சேவகம் செய்யும் அ.தி.மு.கவின் இட ஒதுக்கீட்டு வேஷம் கலைந்தது” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!