Tamilnadu

ரூ.24,396 கோடி வசூலித்தாலும் தரமற்ற சாலைதானா? தமிழக சுங்கச்சாவடிகளின் நிலை குறித்து திருச்சி சிவா கடிதம்!

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளின் தரம் மோசமாக உள்ளதால், அவற்றை சீரமைக்கக் கோரி மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாநிலங்களவை தி.மு.க குழுத்தலைவர் திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2019-20-ம் நிதியாண்டில் தமிழக சுங்கச்சாவடிகளில் 24 ஆயிரத்து 396 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், சங்கக் கட்டண வருவாயில் தமிழகம் நாட்டில் 2-ம் இடத்தில் உள்ளதாகவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Also Read: விதிகளை மீறி சென்னை மாநகருக்குள் செயல்படும் சுங்கச்சாவடி : மோசடியாக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

இந்த சுங்கக் கட்டணம் மூலம் மத்திய அரசுக்கு செஸ் எனப்படும் கூடுதல் வரி கிடைப்பதாக குறிப்பிட்டுள்ள திருச்சி சிவா, இந்தத் தொகையை தமிழகத்தில் உள்ள சங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளின் தரத்தை மேம்படுத்த செலவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது, தமிழகத்தில் உள்ள பல சுங்கக் கட்டணச் சாலைகள், போதிய மின் விளக்குகள் இல்லாமல், குண்டும் குழியுமாக காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சங்கச்சாவடிகளின் செஸ் வருவாயை, சாலைகளின் சீரமைப்பிற்காக பயன்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

Also Read: “இனி நாட்டில் விற்பதற்கு எதுவும் மிச்சமில்லை” - மோடி அரசை பகிரங்கமாக சாடிய திருச்சி சிவா !