Tamilnadu
தமிழகத்தில் உச்சத்தில் வெங்காய விலை : மூன்று மாநிலங்களில் பெய்த கனமழையால் வரத்துக் குறைவு!
ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை ரூ.70-ஐ தண்டியுள்ளது. இந்தியாவில் பருவமழை காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து கடந்த வாரங்களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம், இன்று ரூ.50-க்கு மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.70-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதிக மழை காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சலும் குறைந்ததால் அதன் விலையும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.75-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு சில்லறை விற்பனையில் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த வெங்காய விலை உயர்வு தமிழக மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!