Tamilnadu

ரவுடிகளை ஒழிக்கும் புதிய மசோதா எப்போது சட்டமாக்கப்பட உள்ளது? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ரவுடிகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு, ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது.

தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற போது உயிரிழந்த போலீஸ் சுப்ரமணியன் மரணம், ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டப்படும் அக்கறையை போலீசார் மீது, மனித உரிமை ஆணையம் ஏன் காட்டுவதில்லை?

ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி., 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது என்று பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

Also Read: அ.தி.மு.க ஆட்சியில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு!