Tamilnadu

மாணவர்கள் நலனில் கண்ணாமூச்சி ஆடும் எடப்பாடி அரசு - பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணை நிறுத்திவைப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளிகளைத் திறப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக வந்த அறிவிப்பு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பொதுவாக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையைனும், பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது.

இந்தநிலையில் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், அக்.,1ம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம் என பொறுப்பின்றி அறிவித்த எடப்பாடி பழனிசாமி அரசின் இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read: “ஈரோட்டில் ஒரு அறிவிப்பு.. சென்னையில் ஒரு அறிவிப்பு.. உங்களுக்கே நியாயமா இது?” - தங்கம் தென்னரசு கேள்வி!

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே எந்த ஒரு தளர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவேண்டும். ஆனால் பள்ளிகள் திறப்பு விசயத்தில் எந்த ஒரு ஆலோசனையுமின்றி வெளியான இந்த அறிவிப்பு மாணவர்களின் மீதுள்ள எடப்பாடி அரசின் பொறுப்பின்மையைத் தமிழக மக்களுக்குக் காட்டியது.

இந்த நிலையில், அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்குப் போகலாம் என்று அறிவித்த அரசாணையை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

Also Read: பள்ளிகள் திறப்பது குறித்து குழப்பமான அறிவிப்புகள் எதற்காக? : அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!