Tamilnadu
கள்ளச்சந்தையில் இரிடியம் விற்க முயன்ற கும்பல் கையும் களவுமாக சிக்கியது.. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ கடந்த சில ஆண்டுகளுக்கு 10 இரிடியம் பெட்டிகள் மாயமானது. இது குறித்து மும்பை நகர காவல் நிலையத்தில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். களவுபோன இரிடியம் பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 6 இரிடியம் குழாய்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் களவுபோன 10 இரிடியம் பெட்டிகளில் 3 பெட்டிகள் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு கிடைத்துள்ளது. கள்ளச்சந்தையில் இரிடியத்திற்கு விலை அதிகம் என்பதால் அதை விற்கும் பொருட்டு காரைக்குடி சேர்ந்த தனது நண்பரான வைத்திலிங்கம் என்பவரிடம் ஒரு இரிடியம் பெட்டியை சுவாமிநாதன் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் அமமுக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் வைத்திலிங்கம் இரண்டு பேரும் காரில் தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள இடைத்தரகர்கள் மரியதாஸ், முருகன் ஆகிய இருவரை தொடர்புகொண்டு தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும் இதை விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மரியதாஸ் மற்றும் முருகன் இரண்டு பேரும் புதிய படத்தில் உள்ள தங்கம் என்பவரிடம் தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும் இதை வாங்குவதற்கு யாரும் இருக்கிறார்களா என விசாரித்துள்ளனர் இதைத்தொடர்ந்து தங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர் ஆனால் அங்கு யாரும் இல்லாத நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் அடுத்துள்ள வட்ட கோவில் பகுதியில் இந்த நபர்கள் சுற்றி வருவதாக தகவல் கிடைத்து அங்கு வாகன சோதனை செய்த போது காரில் வந்த இரிடியம் கடத்தலில் ஈடுபட்ட வைத்தியலிங்கம், முதுகுளத்தூர் அமமுக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், மரியதாஸ், முருகன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து அவர்களிடம் 6 குப்பிகளில் இரிடியம் இருப்பதும் தெரியவந்தது மேலும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்தது இதைத் தொடர்ந்து இந்த நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட இரிடியத்தின் மொத்த எடை 144 மில்லி கிராம் ஆகும்.
இது கள்ள சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்பு உள்ளது என கூறப்படுகிறது இந்த இரிடியம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் இதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் இது உண்மையான இரிடியம் தானா என்பது குறித்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார் இதில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சிப்காட் காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாராட்டு தெரிவித்தார்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!