Tamilnadu

கொரோனா ஊரடங்கால் பெற்றோரின் வாழ்வாதாரம் முடக்கம் : வாழைப்பழம் விற்று காப்பாற்றும் 5ஆம் வகுப்பு சிறுவன்!

கொரோனா தொற்று இந்தியாவில் மார்ச் மாதம் பரவத் தொடங்கியதில் இருந்து இன்று வரை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கோடிக்கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வருமானம் இன்றி இன்று வரை தவித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முருகன் கணேஷ்வரி தம்பதி ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி தயாரிக்கும் பணி செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு முனீஸ்வரன், கோகுல் என்று இரண்டு மகன்கள். இவர்களில் முனீஸ்வரன் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு இவர்களின் வாழ்வாதாரத்தையும் விட்டுவைக்கவில்லை. குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முனீஸ்வரன் தன்னுடைய குட்டி சைக்கிளில் வாழைப்பழம் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்பத்திற்கும் தன்னுடைய படிப்புச் செலவிற்காகவும் சேமித்து வருகிறார்.

ஊரடங்கால் தன் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோதிலும் மனம் தளராமல் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வாழைப்பழம் விற்பனை செய்யும் அந்தச் சிறுவனை அந்தப் பகுதி மக்கள் பாராட்டியும் மேலும் அவனிடம் வாடிக்கையாக வாழைப்பழங்களை வாங்கியும் வருகின்றனர். தற்போது அந்த சிறுவனின் பழம் விற்கும் புகைப்படங்கள் சமுகவலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: பஞ்சாப் விவசாயிகள் 2வது நாளாக ரயில் மறியல் - நாடு முழுவதும் வேளான் மசோதாவை எதிர்த்து வழுக்கும் போராட்டம்!