Tamilnadu
கிசான் திட்ட மோசடியில் ஆளுங்கட்சிக்கும் பங்கு? வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொன்முடி வலியுறுத்தல்!
கிசான் திட்ட மோசடி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை ஏன் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், “மத்திய அரசின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக இருந்தாலும் அதில் மாநில அரசின் பங்கு அதிகமாக இருக்கிறது. கிசான் திட்டத்தை மாநிலத்தின் வேளான் ஒருங்கிணைப்பாளர், நொடல் அதிகாரிகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இந்த கிசான் முறைகேடு குறித்து முதல்வரே கூறி இருக்கிறார். 5 லட்சம் போலி விவசாயிகள் என்றும், 110 கோடி ரூபாய் இதில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்வர் மட்டுமல்மால் வேளாண் துறை செயலாளரும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கெல்லாம் யார் காரணம் ? இதில் ஒப்பந்த ஊழியர்கள் 12 பேரை கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால் முக்கிய குற்றவாளிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு எந்தப் பகுதியிலும் இதுபோல நடைபெறவில்லை என மத்திய வேளாண் துறை தெரிவித்திருக்கிறது.
சி.பி.சி.ஐ.டி போலிஸாரோ முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமல் 12 ஒப்பந்த ஊழியர்களை கைது செய்துள்ளது. இதில் ஆளுங்கட்சி ஆதரவு இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போல இந்த கிசான் திட்ட முறைகேட்டு விவகாரத்தை சி.பி.சி.ஐ.டியிடம் இருந்து சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!