Tamilnadu
என்னம்மா இப்படி பண்றீங்களேமா? : விவாதத்துக்கு வராமல் அடம்பிடிக்கும் பாஜகவினர் குறித்து ஆனந்த் ஶ்ரீனிவாசன்
பா.ஜ.க அரசின் தவறான திட்டங்களாலும், நிர்வாகக் குறைபாட்டாலும் இந்தியாவின் பொருளாதார நிலை மிகுந்த கவலைக்குரிய நிலையை அடைந்துள்ளது. பொருளாதார அறிஞர்கள் பலரும் பா.ஜ.க அரசின் நிர்வாக தோல்வியைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், பாசிச போக்கைப் பின்பற்றி விமர்சனங்களை அடக்க நினைக்கின்றனர் பா.ஜ.க-வினர்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வாதங்களை எடுத்துரைக்கும் பொருளாதார நிபுணர்களை, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என பா.ஜ.க-வினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பா.ஜ.க-வினரின் இத்தகைய அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து, விவாதிக்க அச்சம் கொள்வது ஏன் என அவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில்,
“நண்பர்களுக்கு வணக்கம். நான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர். விவாதங்களில் நாகரீகமாகவும், தெளிவாகவும் என் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறேன்.
என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பா.ஜ.க நண்பர்கள் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் என்னை விவாதத்திற்கு அழைக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவது தொடர்கதை.
அதையும் தாண்டி நான் விவாதத்தில் பங்கேற்றால் அந்த விவாதத்தில் பா.ஜ.க-வினர் யாரும் கலந்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.
அதனால் பெரும்பாலான ஊடகங்கள் என்னை அழைப்பதை தவிர்த்து வரும் நிலை உள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு தொடர்பாக என்னையும், பா.ஜ.க-வின் சார்பாக நாராயணன் திருப்பதியையும் அழைத்திருந்தார்கள். நான் வந்ததை அறிந்த நாராயணன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று ஸ்டுடியோவிற்கு வெளியிலேயே அமர்ந்து விட்டார்.
அதன் பிறகு தொலைக்காட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று விவாதத்தில் பங்கெடுத்தாலும் வழக்கமான பாணியில் கேள்விகளுக்கு பதில் இன்றி சண்டையிட்டு திசை திருப்பும் அனைத்து முயற்சிகளையும் செவ்வனே செய்தார்.
நான் பா.ஜ.க.வினருக்கு பகிரங்க சவால் விடுகிறேன். ஏன் என்னைப் பார்த்து ஓடி ஒளிகிறீர்கள்? இவ்வளவுதான் உங்கள் வீரமா? உள்ளபடியே நீங்கள் கோழைகள் இல்லை என்றால் என்னோடு விவாதிப்பதற்கு ஏன் இத்தனை அச்சம்?
நான் ஒருபோதும் தரக்குறைவாகவோ, அநாகரிகமாகவோ, தனி நபர் விமர்சனங்களையோ விவாதத்தில் வைத்ததில்லை. அவ்வாறான ஒரு சிலரோடு கூட விவாதிக்க தயாராக இருக்கும் நீங்கள் என்னோடு விவாதத்தில் பங்கேற்க அச்சப்படுகிறீர்கள் எனில் காரணம், நான் முன் வைக்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதுதான் அர்த்தம்.
நான் மட்டும் இல்லை; இதுபோல் அறிவார்ந்த கேள்விகளை முன் வைக்கும் வேறு சிலரையும் விவாதங்களுக்கு அழைக்கக் கூடாது என்று பா.ஜ.க.வினர் ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்... கேள்விகளுக்கு பதில் இருந்தால் சொல்ல மாட்டார்களா என்ன?
இந்தப் பதிவைப் பார்த்த பின் ஒருவேளை உங்கள் தன்மானமும், மனசாட்சியும் என் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் சரியான அனுகுமுறை என்று உங்களுக்குச் சொல்லுமேயானால் இனியாவது உங்கள் கோழைத்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு விவாதங்களில் என்னோடு நாகரீகமாக உரையாடத் தயாராகுங்கள். இல்லையேல் நீங்கள் மிகப்பெரிய கோழைகள் என்பதை மக்கள் இதன் மூலம் அறிந்து கொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!