Tamilnadu
ஊரடங்கிலிருந்து விடுதலை பெற்ற ஞாயிற்றுக்கிழமை: பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் தொடர்ந்து அலட்சியம்!
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு கிடந்தது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசானது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு கட்ட ஊரடங்குகளை அமல்படுத்தி வந்தனர்.
குறிப்பாக, மக்கள் அதிக கூடும் இடங்கள் அனைத்தையும் முடக்கினர். அதாவது, பேருந்துகள், வணிக வளாகங்கள்,பெரிய கடைகள் என பல்வேறு இடங்களை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 8-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில், பொது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடந்த மூன்று மாதங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, 8 ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என அறிவித்தது. இதனால் இன்று முதல் ஞாயிறு முழு ஊரடங்கு தளர்க்கப்பட்டு உள்ளது.
சென்னையில் ஏற்கனவே முழு ஊரடங்கின்போது 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடந்த ஜூலை மாதம் 5, 12, 19, 26-ம் தேதிகளிலும், ஆகஸ்டு 2, 9, 16, 23, 30-ம் தேதிகளிலும் என 11 முறை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தளர்வு இல்லாத அந்த ஞாயிற்றுக்கிழமைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் வழக்கமான நடைமுறை அமலுக்கு வருகிறது. எனவே இன்று சென்னையில் அனைத்து வகையான கடைகளும் முழுமையாக திறந்தும், சாலைகளில் வழக்கம்போல வாகனங்கள் சென்று கொண்டு இருக்கின்றனர்.
மக்கள் தங்களின் குடும்பம், மற்றும் நண்பர்களுடன் விடுமுறை நாளான இன்று வழக்கம்போல் பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களின் நேரத்தை கழித்து வருகிறார்கள்.
அதே சமயத்தில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதே முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!