Tamilnadu
கோவை மாவட்டத்தில் தீவிரமடையும் கொரோனா தொற்று : இன்று மட்டும் 545 பேர் பாதிப்பு! #CoronaUpdates
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 81,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 52 லட்சத்து 12 ஆயிரத்து 534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று 965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,40,685 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கோவையில் 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை மொத்தமாக 18,410 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 ஆக உள்ளது. தற்போது 51,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 61 பேர் உயிரிழந்தனர். அதில், 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 40 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,748 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!