Tamilnadu
சென்னையில் உச்சமடையும் கொரோனா பரவல் : இன்று 1,270 பேர் பாதிப்பு; பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று மேலும் 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.91 லட்சத்து 303 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,270 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 949 ஆக மொத்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
பிற மாவட்டங்களில் மட்டுமே இன்று 4,681 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக கடலூரில் 370, செங்கல்பட்டில் 321, கோவையில் 320, திருவள்ளூரில் 305, சேலத்தில் 297, தேனியில் 226, காஞ்சியில் 214, நெல்லையில் 204 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 107 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 3லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உள்ளது. அதன்படி, இன்று கொரோனாவில் இருந்து 6,998 பேர் மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனையடுத்து தற்போது 52 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?