Tamilnadu
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்குப் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புள்ளம்பாடி (திருச்சி) 12 செமீ, கல்லக்குடி (திருச்சி), திருத்தணி (திருவள்ளூர்) தலா 11 செமீ, வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பெரம்பலூர், அம்முடி (வேலூர்) தலா 10 செமீ, கரூர் (தர்மபுரி), புவனகிரி (கடலூர் ) தலா 9 செமீ, சோளிங்கர் (ராணிப்பேட்டை ), பொண்ணை (வேலூர்) தலா 8 செமீ, தம்மம்பட்டி (சேலம்), அரியலூர் (அரியலூர்), திருப்பட்டூர் (திருப்பத்தூர்) , ஆர். கே .பேட்டை (திருவள்ளூர் ) தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
ஆகஸ்ட் 24, 25 வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், ஆகஸ்ட் 24 முதல் 28 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு :
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 25.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.3 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!