Tamilnadu

அதிகாரிகளுக்கு கெட் அவுட்... ஆளும் கட்சி பிரமுகர்களை வைத்து அரசு மாளிகையில் கூட்டம் நடத்திய எடப்பாடி!

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள பொது பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை ஒன்று உள்ளது. இந்த மாளிக்கையில், பொதுவாக இந்த பகுதிக்கு வரும் முதல்வரும், அமைச்சர்களும் ஓய்வு எடுப்பதற்கும், அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திடவும், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆனால், இன்று இந்த அரசுக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அ.தி.மு.க ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரை அழைத்து அவர்களிடம் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் வெளியே காத்திருக்க அ.தி.மு.க-வினரிடம் பகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் பிரதிநிதிகள் அரசு விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்காதது குறித்து நேற்று பதில் அளித்த முதல்வர் அரசு அதிகாரிகள் உள்ள போது அரசு விழாவிற்கு யார் வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுத்து கொண்டு தான் வரவேண்டும் என்று விளக்கம் அளித்து இருந்தார்.

ஆனால், தற்போது அதிகாரிகள் பலரும் உள்ள அரசு ஆய்வு மாளிகைக்கு வந்த அ.தி.மு.க-வினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தார்களா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மேலும், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அ.தி.மு.க கட்சி அலுவலகம் உள்ளது. கட்சி அலுவலகம் உள்ள நிலையில், அங்கு கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளாமல் அரசு செலவில், அரசு மாளிகையில் தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு - சென்னையில் பதற்றத்தை உருவாக்கிய பா.ஜ.க!?