Tamilnadu
4.63 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் - பா.ஜ.க உறுப்பினரை வளைத்துப் பிடித்த மதுரை போலிஸ்!
பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய பா.ஜ.க-வை சேர்ந்த எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலிஸார் நேற்று இரவு திருச்சி அருகே கைது செய்தனர்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற நிறுவனத்தை ராஜா, அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் வேலை ‘சதுரங்க வேட்டை’ பாணியில் ஆட்களைப் பிடித்து மோசடி செய்வதுதான்.
எம்.எல்.எம் பாணியில் பொருட்களை விற்று மேலும் ஆட்களைப் பிடித்துக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும். அதன்படி, மளிகைப் பொருட்கள் தொடங்கி, வீடு கட்டிக் கொடுப்பது, ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களிலும் இந்த கமிஷன் வேலையைச் செய்து வந்துள்ளனர்.
எல்ஃபின் நிறுவனத்தை நம்பி ஏராளமானோர் சேர்ந்த பின்னர் ‘அறம் மக்கள் நலச்சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்றைத் தொடங்கிய ராஜா, மக்களிடம் பண மோசடி செய்து வந்துள்ளார். இதையடுத்து, ஏமாந்தவர்கள் ராஜா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே எல்ஃபின் ராஜா பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த மம்சாபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் பட்டாசு தொழிற்சாலை நடத்திவருகிறார். இவரிடம் ராஜா, மற்றும் அவரின் தம்பி ரமேஷ் ஆகியோர் 4.63 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக ஓராண்டுக்கு முன்னர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்திருந்த நிலையில் மீதி பணத்தை ஒரு வருடத்திற்குள் கொடுத்துவிடுவதாக போலிஸாரிடம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் எல்ஃபின் ராஜா. இன்று வரை பணம் கொடுக்கவில்லை என்று மீண்டும் கோவிந்தராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலிஸார் ஒருவாரமாகக் கண்காணித்து வந்துள்ளனர். கைது செய்யப்போகும் தகவல் அறிந்து ராஜா திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அவரது செல்போன் நம்பரை ட்ராக் செய்து பாடாலூரில் நேற்று நள்ளிரவில் போலிஸார் எல்ஃபின் ராஜாவை கைது செய்துள்ளனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்